யாழ்.மல்லாகத்தில் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து சரமாரி வாள்வெட்டு..! ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகத்தில் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து சரமாரி வாள்வெட்டு..! ஒருவர் காயம்..

யாழ்.மல்லாகம் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சடுதியாக சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்த வன்முறை கும்பல், 

கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து நொருக்கி சேதம் விளைவித்ததுடன், அங்கிருந்த நபர் ஒருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு