யாழ்ப்பாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலை ஒன்றில் வேலைக்கே செல்லாமல் ஊதியம் பெறுகிறாராம் ஒரு தாதிய பரிபாலகர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலை ஒன்றில் வேலைக்கே செல்லாமல் ஊதியம் பெறுகிறாராம் ஒரு தாதிய பரிபாலகர்..!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலை ஒன்றில் தாதிய பரிபாலகர் ஒருவர் கடமைக்கு வராத நாட்களையம் கடமைக்கு வந்த நாட்களாக காண்பித்து அதற்கும் ஊதியம் பெற்றுக் கொண்டமை அம்பலமாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய பரிபாலகர் ஒரு மாதத்தில் பல நாட்கள் வைத்தியசாலைக்கு கடமைக்கு வருவதில்லை.

தாதியபரிபாலகர் கையெழுத்திடும் குறிப்பேட்டில் இடைவெளிவிட்டு கையெழுத்து க்கள் இடப்பட்டுள்ள நிலையில் மறுநாள் விடப்பட்ட இடைவெளியில் கையெழுத்திடப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிற நிலையில், அது வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு தெரிந்தா நடைபெறுகிறது என்ற கேள்வி எழுகின்றது. 

தாதிய பரிபாலகர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மேலதிக நேரம் வழங்கப்படுவதாக அறியப்படும் நிலையில் ஒரு மணித்தியாலத்திற்கு 450ரூபா வேதனம் மாதச் சம்பளத்திற்கு மேலதிகமாக கிடைக்கிறது.

வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய பரிபாலகரின் செயற்பாடானது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயற்பாடு என்பதுடன், நிர்வாக முறைகேட்டுமாகும்.  ஆகவே இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 

உரிய நடவடிக்கை எடுப்பது வடக்கு சுகாதார துறையில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு வழிவகுக்கும்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு