வடமாகாண கால்நடை சுகாதார திணைக்களம் மக்களுக்கு சேவை வழங்ககூடிய நிலையில் இல்லை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கால்நடை சுகாதார திணைக்களம் மக்களுக்கு சேவை வழங்ககூடிய நிலையில் இல்லை..

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்;கள் மக்களுக்கு உரிய சேவையை வழங்கக்கூடிய வகையில் இல்லையென்றும் இதற்கு பல கட்டுப்பாடுகளை மத்தியஅரசு போட்டிருப்பதாகவும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புபிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கூடுதலாக கால்நடை வளர்ப்பினையே  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை ஆலோசனைகளைப்பெறுவதில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளணி வசதி மற்றும் வாகன வசதி என்பன இல்லாத காரணத்தினால் பண்ணையாளர்களுக்;கு உரிய சேவைகளை வழங்கமுடியாதிருப்பதாக புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில், இந்த திணைக்கத்திற்கான வாகனத்தேவைகள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டிருக்கினற்து.

ஆனால் அது தீர்க்கப்படவில்லை.தொடர்ந்து இந்த நிலை காணப்படுகின்றது. அதனால் சிறப்பான சேவையை மக்களுக்கு ஆற்றமுடியாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக,ஒரு இடத்தில் நோய் ஏற்பட்டிருந்தால் அதைச்சென்ற பார்ப்பதற்கான வசதிகள் கூட இல்லை. மருந்துகளை எடுக்கக்கூடிய வசதிகள் இ;ல்லை.

இவ்வாறு பல  பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றில் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு போட்டிருப்பதனால் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியாதிருக்கின்றது.

இது மாகாணத்தில் உள்ள சகல இடங்களிலும்  இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு