நிரந்தர வீட்டு திட்டம் வழங்குங்கள், புன்னைநீராவி மக்கள் கோரிக்கை..

கிளிநொச்சி புன்னைநீராவிக்கிராமத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட புன்னை நீராவிக் கிராமத்தில் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்தப்பிரதேசத்தில் 11 குடும்பங்களுக்கு மாத்திரம் நிரநதரமான வீடுகள் வழங்கப்படடிருக்கின்றன.
ஏனைய குடும்பங்கள் மீள்குடியேறியதிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்தும் தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றன.
தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத்தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்த போதும்,முன்னர் தமது காணிகளுக்கு ஆவணங்கள் இன்மையால் வீட்டு;த்திட்டங்கள் வழங்கப்படவில்லை.
தற்போது காணி ஆவணங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டில் 76 பேருக்கு வீட்டுத்திட்ட்ஙகள் வழங்குவதாகத்தெரிவித்து அதற்கான ஆணங்;கள் தயார் செய்யப்பட்டு வங்கிக்கணக்குகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதுவரை வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை.
எனவே தமக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.