யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி. கொஸ்தாவின் வழிகாட்டலில் 

குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி என் எஸ்.டி.சத்திரசிங்கவின் தலைமையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்க்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிசார் வட்டு தெற்கு இன்பச்சோலை பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் வட்டுக்கோட்டை பொலிசார் 8 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 8 மின் மோட்டார் இயந்திரங்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகவும் மேலும் திருட்டுக்களில் சந்தேக நபர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு