தாய்வான் கடற்பகுதிகளை நோக்கி சீனா ஏவுகணை தாக்குதல்!!

ஆசிரியர் - Editor II
தாய்வான் கடற்பகுதிகளை நோக்கி சீனா ஏவுகணை தாக்குதல்!!

தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்பகுதிகளை நோக்கி சீனா நாட்டுப் படைகள் ஏவுகணைகளை தாக்குதல்களை நடத்தியுள்ளன. 

தாய்வானின் கிழக்கு கடல்பகுதியை நோக்கி பல ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக சீன இராணுவத்தின் கிழக்கு பகுதி கட்டளைபீடம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் தங்கள் இலக்கை துல்லியமாக தாக்கின என சீனா அரசாங்கம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது. போர் ஒத்திகை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது ஒத்திகை காரணமாக விதிக்கப்பட்ட வான்வெளி கடல் பகுதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என சீனா மேலுமு; தெரிவித்துள்ளது.

தாய்வான் நீரிணையில் உள்ள தீவுகளில் நீண்ட தூர ஏவுகணைகள் விழுந்து வெடித்தன என தாய்வான் தெரிவித்துள்ளது இந்த தீவுகள் தாய்வானின் முக்கிய பகுதிக்கு அருகில் காணப்படுகின்றன.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு