SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் தனிப்பட்ட வாகனங்களுக்கு இனிமேல் எரிபொருள் கிடையாது.! மாவட்டச் செயலர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் தனிப்பட்ட வாகனங்களுக்கு இனிமேல் எரிபொருள் கிடையாது.! மாவட்டச் செயலர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்..

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்புவதெனவும், தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதில்லை. எனவும் அவ்வாறு வழங்குவதாக இருந்தால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்படவேணடும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட செயலரின் தலைமையில் பிரதேச செயலர்கள், இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், பொலிஸார் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இதன்போது , பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் பிரதேச செயலர்களால், எந்தெந்த பொலிஸ் நிலையத்தினர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்ற விவரமும், முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதிப்பது என்றும், அலுவலகத் தேவைக்கு தமது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் பொலிஸாரின் விவரங்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலகத்துக்கு சமர்ப்பித்து, பிரதேச செயலரின் அனுமதி பெற்றே அ

தற்கு எரிபொருள் நிரப்பலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.