பொதுமக்களுக்கு பெற்றோல் இல்லை என கூறிவிட்டு செல்வாக்குள்ளோருக்கு பெற்றோல், கான்களிலும் வழங்கப்பட்டதாம்! கியூ ஆர் முறையும் கணக்கில் இல்லை, பொலிஸார்????

ஆசிரியர் - Editor I
பொதுமக்களுக்கு பெற்றோல் இல்லை என கூறிவிட்டு செல்வாக்குள்ளோருக்கு பெற்றோல், கான்களிலும் வழங்கப்பட்டதாம்! கியூ ஆர் முறையும் கணக்கில் இல்லை, பொலிஸார்????

பெற்றோல் முடிந்துவிட்டதாக கூறி பொதுமக்களை வெளியேற்றிய பின்னர் செல்வாக்குள்ள சிலருடைய மோட்டார் சைக்கிள்களுக்கு கியூ ஆர் நடைமுறையும் இல்லாமல் பெற்றோல் வழங்கப்பட்டுள்ளதுடன், கொள்கலன்களிலும் தாராளமாக பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் பூநகரி ப.நோ.கூ சங்கத்திற்கு சொந்தமான நாச்சிக்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது, நேற்றுமுன்தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் முடிந்துவிட்டதாக பொதுமக்களுக்கு கூறப்பட்டதுடன் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இது நடந்த சில மணி நேரங்களில் நாடு முழுவதும் அமுலில் உள்ள கியூ ஆர் நடைமுறை மற்றும் எந்தவொரு நடைமுறையும் பின்பற்றப்படாமல் செல்வாக்குள்ள சிலருக்கு தாராளமாக பெற்றோல் வழங்கப்பட்டுள்ளதுடன், கொள்கலன்களிலும தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதனை அங்கிருந்த பொதுமக்கள் நேரடியாக பார்த்துள்ளதுடன், புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் பூநகரி பிரதேச செயலரிடம் வினவியபோது, நாடு முழுவதும் கியூ ஆர் நடைமுறை அமுலாகும் நிலையில் எரிபொருள் நிரப்ப நிலையங்களில் இருந்து

தாங்கள் விலகிக் கொண்டுள்ளதாக கூறியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக கட்டாயம் விசாரணைகள் இடம்பெறும் எனவும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு