யாழ்.குருநகரில் தேவாலயம் மீது தாக்கிய மின்னல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் தேவாலயம் மீது தாக்கிய மின்னல்..!

யாழ்.குருநகர் புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தேவாலயம் மீது மின்னல் தாக்கியுள்ளது. 

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்திருந்த நிலையில் இந்த மின்னல் தாக்கம் இடம்பெற்றிருக்கின்றது. 

மின்னல் தாக்கியதில் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் மின் இணைப்புக்கள் சிறிதளவ சேதமடைந்துள்ளது. 

எனினும் ஆலயத்தில் இருந்த பக்தர்கள் எவருக்கும் தெய்வாதீனமாக எதுவும் இடம்பெறவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு