6000 ஓட்டங்களை கடந்தார் திமுத்!!

ஆசிரியர் - Editor II
6000 ஓட்டங்களை கடந்தார் திமுத்!!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டுவரும் திமுத் கருணாரத்ன, 6000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்தார்.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம், காலி சர்வதேச மைதானத்தில் இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது. 

இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு