SuperTopAds

போதைபொருள் பாவனையால் வடக்கில் பெரும் பாதிப்பு கூறுகிறார் அமைச்சர் விஜேயதாஸ..

ஆசிரியர் - Editor I
போதைபொருள் பாவனையால் வடக்கில் பெரும் பாதிப்பு கூறுகிறார் அமைச்சர் விஜேயதாஸ..

வடமாகாணத்தில் போதை பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வடமாகா ண இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அக்கறையற்றிருக்கின்றார்கள். 

நேற்றய தினம் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த உயர்கல்வி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் நிகழ்வில் மேலும் கூறுகையில்,

வடமாகாணத்தில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வடமாகாணத்தில் போதைபொருள்க ளின் பாவனை அதிகரித்து வருகின்றது. இதற்கு இளைஞர்கள் அடிமையாகும் வாய்ப்புக்களும் அதிகரித் துக் காணப்படுகின்றன. இவை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறையற்றிருக்கின்றனர். 

தமிழ் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை பெற்றுக் கொள்ளவும், அதனை எப்படி தக்கவைப்பது என் பது தொடர்பிலும் சிந்திக்கிறார்கள். அற்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றார்கள். மக்களுக்குத் தேவையானவற்றை செய்வதில் அவர்களுக்கு அக்கறையில்லை. 

இதனால் வடமாகாணத்தை எதிர்காலத்தில் சிறந்த முறையில் கட்டியெழுப்பவேண்டிய ஒரு இளைஞர் சமுதாயம் அழிந்து கொண்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் பொறுப்பற்றிருக்கும் நிலையில் சமூக அமைப் புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இதனை தடுக்கவேண்டும் என்றார்.