உலகின் மிக வயதான பாண்டா கரடி கருணைக்கொலை செய்யப்பட்டது!!
சிறைப்பிடிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் வயதான ஆண் பாண்டா கரடி ஒன்று ஹொங்கொங்கின் உயிரியல் பூங்காவில் வைத்து கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் உள்ள ஓஷன் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் நேற்று வியாழக்கிழமை கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.
யுn யுn என்று அழைக்கப்படும் இந்த பாண்டா கரடி, அதனுடைய 35 வயதில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது. கரடியின் 35 வயது என்பது ஒரு மனிதன் 105 வயது வரை வாழ்ந்ததற்குச் சமம் என்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக பாண்டாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததாலும், திட உணவை முழுவதுமாக நிறுத்தி, வெறும் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொண்டதாலும், கருணைக்கொலை செய்யப்பட்டதாக ஓஷன் பார்க் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பூங்காவைச் சேர்ந்த கால்நடை வைத்தியர்கள், மற்றும் பாண்டா கரடிக்கான சீன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் கலந்தாலோசித்துதான் இந்த கருணைக்கொலை செய்யும் முடிவை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.