பிரித்தானிய பிரதமர் தேர்தல்!! -இறுதிச் சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை-
பிரித்தானிய பிரதமர் தேர்தலுக்கான இறுதிச் சுற்றுக்கு இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அண்மையில் தமது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த 3 சுற்று தேர்தல்களில் 4 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 4வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த 2 சுற்று தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்து முன்னிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.