SuperTopAds

நள்ளிரவில் சீருடையினருக்கு கொள்கலன்களில் எரிபொருள்..! யாழ்ப்பாணத்தில் நடக்கும் இருட்டு வியாபாரம், மக்கள் ஆதங்கம்...

ஆசிரியர் - Editor I
நள்ளிரவில் சீருடையினருக்கு கொள்கலன்களில் எரிபொருள்..! யாழ்ப்பாணத்தில் நடக்கும் இருட்டு வியாபாரம், மக்கள் ஆதங்கம்...

யாழ்.தென்மராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட கொள்கலன்களில் எரிபொருள் நிரப்பிக் கொடுக்கப்பட்டடிருக்கின்றது. 

இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் சீருடை அணிந்தவர்கள் கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த ஒருவருடைய தொலைபேசியில் படமாக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் எரிபொருளுக்காக மக்கள் தவம் கிடக்கின்றனர். 

இந்நிலையில் மக்களுக்கு 1000 ரூபாய்க்கும் 1500 ரூபாய்க்கும் எரிபொருள் வழங்குவோர் சீருடையினருக்கு நள்ளிரவில் கொள்கலன்களில் எரிபொருள் வழங்குவது எவ்வாறு? சீருடையினர் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு வேறு ஏற்பாடுகள் உள்ளபோது, 

பொதுமக்களுக்கான எரிபொருளை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்வது யாருக்காக? என வரிசையில் நின்ற மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டவர்களே பதுக்கல் வியாபாரிகளைபோல் இரவு நேரங்களில் கொள்கலன்களில் எரிபொருள் நிரப்பினால் 

பின்னர் பாதுகாப்ப என்ன லட்சணத்தில் இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.