முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சில குழப்பங்கள் ஆனாலும் எவரும் கண்டு கொள்ளவில்லை..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சில குழப்பங்கள் ஆனாலும் எவரும் கண்டு கொள்ளவில்லை..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சில குறைபாடுகள் காணப்பட்டிருந்தபோதும் அவற்றை பொருட்படுத்தாமல் உச்ச பொறு மையை கடைப்பிடித்து நினைவேந்தலுக் கு ஒத்துழைத்த அனைவருக்கும் வடமாகா ண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ந ன்றி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்றய தினம் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்த து. இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங் களுக்கு வழங்கியிருக்கும் அறிக்கையிலே யே மேற்படி விடயத்தை முதலமைச்சர் கூ றியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் கூ றியுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் நினை வேந்தலில் ஒற்றுமையாக சகலரும் கலந் து கொண்டு மிக குறுகிய காலத்திற்குள் சிறப்பாக நடாத்தியமை அனைவரது பாரா ட்டுக்களையும் பெற்றுள்ளது.

மேலும் நினைவேந்தலில் சில குறைபாடுக ள் நிகழ்ந்ததாக எனக்கு கூறப்பட்டது. ஆயி னும் நினைவேந்தலின் தாற்பரியத்தையும் உணர்ந்தும், எமது மக்கள் பிரதிநிதிகள் ம ற்றும் மக்களின் அனுபவ முதிர்ச்சி காரண மாக பிரச்சினைகளை கண்டு கொள்ளாம ல் விட்டமை மகிழ்ச்சி.

அந்தவகையில் நினைவேந்தலுக்கு ஒத்து ழைப்பு வழங்கிய அனவருக்கும் நன்றிகள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு