பாடசாலை சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்துகள் தொடர்பில் வடபிராந்திய முகாமையாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
பாடசாலை சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்துகள் தொடர்பில் வடபிராந்திய முகாமையாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

வடமாகாணத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்துகள் தடையின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும். என இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் செ.கலபாலச்செல்வம் கூறியுள்ளார். 

யாழ்.கோண்டாவில் அமைந்துள்ள இ.போ.ச வடமாகாண தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளிலும் பாடசாலை சேவைகளில் ஈடுபடும் இ.போ.ச பேருந்துகள் தமது சேவையை தடையின்றித் தொடர்வதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையை தற்சமயம் வழங்கி வருகின்றன, 

இ.போ.ச பஸ் வண்டிகளுக்கான உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதில் நாம் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகிறோம். இதேபோல் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை 

வடமாகாண தலைமை காரியாலயத்தில் வைத்து மூன்று மாதங்களுக்கு மேலாக பகிர்ந்து அளித்து வருகிறோம். 

ஆகவே நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு நாங்கள் இயன்றளவு வளத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவையினை வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு