SuperTopAds

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!! -கனடா அரசாங்கம் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!! -கனடா அரசாங்கம் அறிவிப்பு-

கனடாவிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் கட்டாயமாக தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11 ஆம் திகதி ரத்து செய்யப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு அதிகரிப்பதால் பரிசோதனை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஜூலை 19 ஆம் திகதி முதல் வான்கூவர், கல்கரி, மாண்ட்ரீல் மற்றும் டொராண்டோ ஆகிய 4 முக்கிய விமான நிலையங்களுக்கு வருபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.