பிரிட்டன் பிரதமர் தேர்தல்!! -ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலையில்-

ஆசிரியர் - Editor II
பிரிட்டன் பிரதமர் தேர்தல்!! -ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலையில்-

பிரிட்டனில் புதிய பிரதமருக்கான முதல் சுற்றை தேர்தலை தொடர்ந்து இரண்டாம் சுற்றிலும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் உள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படும் வரை இடைக்கால பிரதமராகப் பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்திருந்தார். 

அதிலிருந்து பிரிட்டன் அரசியல் களத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதிலும் ரிஷி சுனக் தொடர்ந்து 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் தொடர்கிறார். 

இந்நிலையில், ரிஷி சுனக் டுவிட்டர் பக்கத்தில், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு