SuperTopAds

20 வருடங்களாக மாதவிடாயால் அவதியுற்ற ஆண்!! -சீனாவில் அதிர்ச்சிச் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
20 வருடங்களாக மாதவிடாயால் அவதியுற்ற ஆண்!! -சீனாவில் அதிர்ச்சிச் சம்பவம்-

சீனா நாட்டில் வசித்துவரும் பிரஜை ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக கர்ப்பப்பை உடன் மாதவிடாயும் ஏற்பட்ட நிழைலயில் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட சிகிச்சைக்கு பின் நலமடைந்துள்ளார்.

அந்நாட்டைச் சேர்ந்த 33 வயது ஆண் ஒருவர், நீண்டகாலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்றுவலியோடு இவருக்கு சிறுநீரில் ரத்தமும் வெளியேறி உள்ளது. 

இந்த வேதனையை அவர் தொடர்ந்து 20 வருடங்களாக அனுபவித்து வந்துள்ளார். அண்மையில் வைத்தியர்கள் மேற்கொண்ட குரோமோசோம் சோதனையில், இவர் உயிரியல்ரீதியாக பெண் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

தவிர, இவருக்கு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை மற்றும் சினைப்பை உள்ளதையும் கண்டு பிடித்துள்ளனர். 20 வருடங்கள் கழித்து இந்த நபர், தான் பெண் என்பதை அறிந்துள்ளார்.

அதாவது, பல வருடங்களாக இவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்துள்ளது. சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரிசெய்யும் நேரத்தில் அவர் பருவமடைந்தது தெரியாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிலிருந்து சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரோடு ரத்தமும், வயிற்றில் அசௌகர்யமும், வலியும் தொடர்ந்துள்ளன.

தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேல் வயிற்றுவலி நீடித்ததால், வைத்தியர்கள், இவர்  குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கருதி அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துள்ளார். அப்போதும் வலி தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், கடந்த வருடம் இவருக்கு குரோமோசோம் பகுப்பாய்வு சோதனையும், இன்னபிற மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் இவருக்கு பெண் குரோமோசோம்கள் அதிகம் உள்ளதும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை மற்றும் சினைப்பை உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆணுக்கான ஓமோனான ஆண்ட்ரோஜென் குறைவாகவும், பெண்ணுக்கான ஓமோன் தூண்டல் அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.

அதாவது இவர் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் இனப்பெருக்க உறுப்புகளோடு பிறந்துள்ளார். இதுநாள் வரை அவருக்கு ஏற்பட்டு வந்த வயிற்றுவலியும், இரத்தப்போக்கும் மாதவிடாயின் காரணமாக ஏற்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த உண்மையைக் கேட்டு அதிர்ந்துபோனவர், தான் ஆணாக இருக்கவே விரும்புவதாகக் கூறி உள்ளார். பெண்ணுக்கான இனப்பெருக்க உறுப்புகளை நீக்குமாறு கோரியதால், கடந்த மாதம் இவருக்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பெண்ணுக்கான இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டன.

இதன் பின் இவரால் ஆணாக வாழ முடியும். ஆனால், இவரின் விதைப்பைகளால் விந்தணுவைச் சுரக்க முடியாததால், இவரால் குழந்தை பெற முடியாது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.