என்னுடைய மாணவன் பிரதமரானால் எனக்கு சந்தோஷமே..! சீ.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
என்னுடைய மாணவன் பிரதமரானால் எனக்கு சந்தோஷமே..! சீ.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்..

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமராக பதவியேற்றால் எனது மாணவன் பிரதமர் என்பதையிட்டு நான் மிகுந்த சந்தோஷமடைவேன். என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

இன்றைய தினம் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன, 

இதற்கு பதிலளிக்கும்போது சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனை பிரதமராக நியமிக்கலாம் என்று அணுகியநிலையில் அதை எல்லா கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்த பதவியை ஏற்க முடியும் என கருத்து தெரிவித்திருந்தார். 

இதை சுமந்திரனிற்கு தெரிந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார். சுமந்திரனை பிரதமராக அழைத்து என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன். ஏனென்றால் அவர் என்னுடைய மாணவர். 

பல வருட காலமாக தெரிந்தவர் என்ற வகையில் அதற்கு நான் எதிர்ப்பு அல்ல. இது பற்றி இணைய வழிக் கலந்துரையாடலில் கூறியதன் காரணமாக இன்று அது பரகசியமாகியுள்ளது. 

ஆனால் சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பிலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பில் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்வி.

இரண்டாவது கேள்வி தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும். 

காரணம் எந்த நேரமும் மத்திய அரசுடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசாங்கத்தினுடைய விருப்பு தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மறந்து விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

நான் நினைக்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டது. சம்பந்தனும் அதே போலவே. 

சுமந்திரன் இவ்வாறு பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ் கட்சிகள் அனைவரினதும் ஏகோபித்த விருப்பை பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு