இ.போ.ச பேருந்துகளை முடக்கி போராட்டம்..! பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம்...

தமக்கும் எரிபொருள் வழங்ககோரி கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் இருந்து எரிபொருளை வழங்குமாறு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை முன்பாக தனியார் பேருந்துகளை நிறுத்தி
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர் இந்த நிலையில் 19 90 அவசர அம்புலன்ஸ் சேவைக்குரிய எரிபொருளும் குறித்த இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் வழங்கப்பட்டு வந்திருந்தபோதும்
இன்றைய தினம் அதற்கான எரிபொருளையும் வழங்க விடாது தனியார் பேருந்து உரிமையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி போலீசார் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன்
இரண்டு தரப்பினரையும் மாவட்ட செயலகத்திற்கு சென்று கலந்துரையாடி ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.