ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தாரின் தீர்மானம் பாதகமானது! பதுக்கலுக்கு வழிவகுக்குமாம், யாழ்.மாவட்ட செயலர் கூறுகிறார்...

ஆசிரியர் - Editor I
ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தாரின் தீர்மானம் பாதகமானது! பதுக்கலுக்கு வழிவகுக்குமாம், யாழ்.மாவட்ட செயலர் கூறுகிறார்...

யாழ்.மாவட்டத்தில் உரிய முறைகளை கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறினால் அதனால் கறுப்புசந்தை மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை தடுக்க முடியாது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான் தாம் எரிபொருள் வழங்குவோம் என அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ் மாவட்டடத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாழில் ஐஓசி நிறுவனம் பொது மக்களுக்கு எரிபொருளை வழங்குவோம் என ஊடக சந்திப்பு நடத்தியதாக அறிகிறேன். அவர்கள் தமது எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு எவ்விதமான எழுத்து மூலமாக அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை.

வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருள் வழங்க குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுக்குமானால் முறையான ஒரு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். 

அவ்வாறில்லாமல் வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருளை வழங்கும்போது அருகில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெறக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும் நிலையில் கறுப்புச் சந்தையை கட்டுப்படுத்த முடியாதுபோகும்.

ஆகவே எரிபொருள் விநியோகத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் மட்டும் தனித்து செயற்படுத்தி விட முடியாத நிலையில் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு