உக்ரேன் குடியிருப்பு கட்டடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!! -21 பேர் பரிதாப பலி-
உக்ரேன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து சுமார் 5 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரேனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது.
மறுபுறம் உக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரேனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாளே ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தியுள்ளது.