யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கடமைக்கு செல்லும் ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் பேருந்து இல்லாமல் வீதிகளில் காத்திருக்கும் அவலம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கடமைக்கு செல்லும் ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் பேருந்து இல்லாமல் வீதிகளில் காத்திருக்கும் அவலம்..

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களில் கடமைக்கு சென்றிருந்த ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் கிராமங்களில் உள்ள தமது பாடசாலைகளுக்கும், பணி இடங்களுக்கும் செல்ல முடியாமல் அந்தரிகின்றனர்.

இது குறித்து கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் சிலர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து பிரதான வீதிக்கோ அல்லது யாழ்.நகருக்கோ ஒரு பஸ்ஸில் பயணம் செய்து 

அங்கிருந்து கிளிநொச்சிக்கு பிரிதொரு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டு வருகைதந்தபோதும் கிளிநொச்சியின் கிராமங்களில் உள்ள தங்களது பாடசாலைகளுக்குரிய நேரத்திற்குச் செல்வதற்கு பஸ்கள் இன்மையால் காலை ஒன்பது மணிவரை வீதியில் காத்திருப்பதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையினர் தங்கள் பணியாளர்களுக்கான எரிபொருள்கோரி பணி பகிஸ்கரிப்பில் ,ஈடுப்பட்டு வருகின்றனர்.இதேவேளை தனியார் பேரூந்துகள் போதிய எரிபொருள் இன்றி தங்களது சேவையினை மட்டுப்படுத்தியுள்ளனர். 


இதன் காரணமாக தாம் உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பாடசாலைகளில் தினவரவை உறுதிப்படுத்துவதற்கு கைவிரல் அடையாள இயந்திர பயன்பாடு இருப்பதனால் தாமதமாகி செல்கின்ற போது சில வேளைகளில் அரைநாள் கடமையாக பதியப்படுகின்றன. 

மாணவர்கள் முதல் பாடவேளையை வெறுமையாக கழிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு