யாழ்.நகர் பகுதியை சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம், இருவர் கைது! சிறுமியை கடத்தி தாக்கியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகர் பகுதியை சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம், இருவர் கைது! சிறுமியை கடத்தி தாக்கியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..

யாழ்.நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி கடத்தப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்தில் முறையிட்டு ஆளுநர் அலுவலக தலையீட்டில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாக கூறியிருக்கும் உறவினர்கள், இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றிருந்தபோது திருப்பி அனுப்பபட்டதாகவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆளுநர் அலுவலக தலையீட்டினால் பொலிஸார் முறைப்பாட்டினை பொறுப்பேற்று விசாரணைகளை ஆரம்பித்தனர். 

இதற்கிடையில் குறித்த சிறுமி கிளிநொச்சி பகுதியில் வைத்து  பொலிஸாரினால் மீட்கப்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தமது முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

எனவும் , தமது பகுதிக்கு அண்மையில் வசிக்கும் இளைஞர் குழு ஒன்றினால் தமக்கு தொடர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அது தொடர்பிலும் பொலிஸாருக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை எனவும், மாறாக தம்மையே பொலிஸார் அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ள சிறுமியின் உறவினர்கள், 

சம்மந்தப்பட்ட நபர்கள் தமது வீட்டின் அருகிலேயே நடமாடுவதாகவும் அவர்களை பொலிஸார் கண்டுகொள்வதில்லை எனவும், தாங்கள் இனினும் கடத்துவோம் என அவர்கள் தம்மை அச்சுறுத்துவதாகவும், தமது குடும்பத்திலுள்ள இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தாக்கியதாகவும்

அது குறித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கடத்தப்பட்ட சிறுமி தாக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய வயிற்று பகுதியில் அடிகாயங்கள் உள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் வடமாகாண ஆளூநர் அலுவலகத்தின் முன்னால் இருந்து ஊடகங்களிடம் கூறியுள்ளனர். 

மேலும் அதனை ஆளுநர் அலுவலகத்திற்கும் முறையிட்டு இருந்தனர். அதனை அடுத்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்.பொலிஸார் சிறுமியின் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் , சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு