கிழக்கு உக்ரைன் நகரை கைப்பற்றியது ரஷிய படை!!
உக்ரைன் மீது ரஷியா படைகள் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போர் தொடுத்தது. ரஷிய படைகளின் தாக்குதல் 5 ஆவது மாதத்தை நெருங்கி உள்ளது.
தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது.
அங்குள்ள செவரோடோனெட்ஸ்க் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி வந்தன. கட்டடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
,ந்த நிலையில் அந்நகரை ரஷிய ,ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ,தனை அந்நகர மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரிக் உறுதிப்படுத்தினார்.