உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஆசிட் வீச்சு!!
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் உள்ள லாகூரில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கின்சா (வயது 23) என்ற திருநங்கை நேற்று புதன்கிழமை ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிலில் வந்த ஹம்சா சலீம் என்ற நபர் கின்சா மீது ஆசிட் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
முகம் மற்றும் கைகளில் தீக்காயங்களுடன், சர்வீசஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கின்சாவின் தோழி ஹினா, மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- கின்சவுடன் உறவை வளர்த்துக் கொள்ள ஹம்சா விரும்பியதாகவும் அதற்கு கின்சா மறுப்பு தெரிவித்ததால் ஹம்சா அவர் மீது ஆசிட் வீசியதாகவும் தெரிவித்தார்.
மேலும் திருநங்கைகளை துன்புறுத்தும் கும்பலுக்கு ஹம்சா தலைவனாக இருப்பதாகவும், கின்சாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் முதல்வரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆசிட் தாக்குதல் நடத்திய ஹம்சாவையும் மேலும் 3 கூட்டாளிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.