யாழ்.கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! பிரதேச செயலகம் ஒட்டிய அறிவுறுத்தல்களை கிழித்தெறிந்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! பிரதேச செயலகம் ஒட்டிய அறிவுறுத்தல்களை கிழித்தெறிந்த மக்கள்..

யாழ்.கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வருவதாக கூறப்பட்டது. 

இதனடிப்படையில் அதிகாலை தொடக்கம் பொதுமக்கள் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தனர். 

இந்நிலையில் திடீரென அங்குவந்த கோப்பாய் பிரதேச செயலக ஊழியர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மட்டும் 

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும். எனவும் பொதுமக்களுக்கு வழங்கப்படாது. எனவும் எழுதப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர். 

இதனால் குழப்பமடைந்த பொதுமக்கள் சுவரொட்டிகளை கிழித்து எறிந்து சீற்றமடைந்தனர். 

இதனையடுத்து அங்குவந்த பொலிஸார் அமைதியை கடைப்பிடிக்குமாறும் பிரதேச செயலருடன் பொதுமக்கள் இது குறித்து கலந்துரையாடுமாறும் கேட்டுக் கொண்டனர். 

இந்நிலையில் வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டிருப்பதுடன், எரிபொருளுக்காக மக்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். 


யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு