வெடிமருந்து விற்பனை! யாழ்.புலோப்பளையில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு, 2 பேர் கைது, 6 குண்டுகள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
வெடிமருந்து விற்பனை! யாழ்.புலோப்பளையில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு, 2 பேர் கைது, 6 குண்டுகள் மீட்பு...

யாழ்.கச்சாய் - புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் 

குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் 6 குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு