மின் இணைப்பு வயர்களை திருடிய 3 பேர் கைது, மின்சாரசபை ஊழியர் உடந்தை, திருட்டு வயர்களை வாங்கியவருக்கும் சிக்கல்...

ஆசிரியர் - Editor I
மின் இணைப்பு வயர்களை திருடிய 3 பேர் கைது, மின்சாரசபை ஊழியர் உடந்தை, திருட்டு வயர்களை வாங்கியவருக்கும் சிக்கல்...

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடாரப்பு பகுதியில் மின்சார சபைக்கு சொந்தமான மின் இணைப்பு வயர்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விற்பனை செய்யப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான மின் இணைப்பு  வயர்களை, நேற்றுமுன்தினம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினர் மீட்டு 

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் UNKW அமரசிங்க மருதங்கேணி பொலிஸ் நிலைய தலைமை பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

திருடப்பட்ட வயர்கள் ஆழியவளையில் உள்ள ஒரு  பண்ணைக்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வயர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மின்சார துண்டிப்பு வேளையில் குறித்த மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரத்தூண்களில் இருந்து திருடப்பட்டுள்ளது.

இதற்கு மின்சாரசபை ஊழியர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளதுடன் மூவர் சந்தேக நபர்களாக தேடப்பட்டு வருகின்றனர்.

அரச உடமையை ஆழியவளை பண்ணையில் வைத்திருந்தமை தொடர்பில் பண்ணையின் உரிமையாளருக்கும் எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு