100 வீதம் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து!! -கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை-
அமெரிக்கா நாட்டின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab)) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.
இம் மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இம் மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிகிச்சை வழங்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்றும் டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.