திறப்பு விழாவின் போது இடிந்து வீழ்ந்த மேம்பாலம்!! -10 அடி பள்ளத்தில் வழுந்த விருந்தினர்-
மெக்ஸிகோவின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பு ஜெயினால் புதிதாக அமைக்கப்பட்ட நடைமேடை மேம்பாலம் திறப்பு விழாவின்போது திடீரென இடிந்து விழுந்தது.
இந்நிலையில் குறித்த புதிய மேம்பால திறப்புவிழாவில் கலந்து கொண்டிருந்த மெக்ஸிகோ நகர மேயர் ஜோஸ் லுயிஸ் யுரியோசெட்யு உட்பட பலர் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளனர்.
இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் இன்று புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கு பின் அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் புதிய மேம்பாலத்தில் நடந்து சென்றபோது, பாரம் தாங்காமல் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதில், மேம்பாலத்தின் மேல் நடந்து சென்றுகொண்டிருந்த நகர மேயர் ஜோஸ் லுயிஸ் யுரியோசெட்யு உட்பட பலர் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளனர். அளவுக்கு அதிகமான பாரம் இருந்ததால் எடை தாக்காமல் நடைமேடை பாலம் இடிந்து வீழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.