தந்தையை சுட்டு கொலை செய்த 2 வயது மகன்!!
அமெரிக்கா நாட்டில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அண்மையில் கூட அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ரெஜி மாப்ரி – மேரி அயலா. இவர்களுக்கு 3 குழந்தைகள். சம்பவம் நடந்த அன்று சிறுவனின் பெற்றோர்கள் “லோட்” செய்யப்பட்ட துப்பாக்கியை கவனிக்காமல் அப்படியே வீட்டில் வைத்துள்ளனர்.
அதை எடுத்த 2 வயது சிறுவன் தந்தையை தவறுதலாக சுட்டு உள்ளான். அவசர அழைப்பின் மூலம் எச்சரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது சிறுவனின் தாய் மேரி அயலா தனது கணவர் ரெஜி மாப்ரிக்கு முதல் உதவி வழங்குவதை பார்த்துள்ளனர்.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனின் தந்தை இறந்துள்ளார். 26 வயதான நபர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதலில் பொலிசார் நினைத்தனர்.
ஆனால் விசாரணையில் அந்த தம்பதியருக்கு மொத்தம் 3 குழந்தைகள் எனவும் அதில் 2 வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது.