SuperTopAds

கர்ப்பிணிப்பெண் மீது கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!!

ஆசிரியர் - Editor II
கர்ப்பிணிப்பெண் மீது கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தினத்தன்று 5 பேர் கொண்ட குழு கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து கணவரை அடித்து கட்டிப்போட்டு விட்டு, குறித்த பெண்ணை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தானே வைத்தியசாலைக்குச் சென்று தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்துள்ளார். அதனை அடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், கர்ப்பிணிப் பெண் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, அவரது இரத்த மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக லாகூருக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க பஞ்சாப் பொலிஸ் சிறப்புக் குழுக்களை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.