SuperTopAds

உக்ரைனில் புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும்!! -ரஷ்ய ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
உக்ரைனில் புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும்!! -ரஷ்ய ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை-

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அதிசக்திவாய்ந்த எறிகணைகளை கொடுத்தால், உக்ரைனில் புதிய இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான குறித்த ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்குவதானது இருநாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு நடுத்தர இலக்கு எறிகணைகளை வழங்க தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்ய ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளமையானது, உக்ரைனுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.