SuperTopAds

40 வயதிற்கு மேற்பட்டோரும் இராணுவத்தில் சேரலாம்!! -ரஷ்ய ஜனாதிபதி அதிரடி-

ஆசிரியர் - Editor II
40 வயதிற்கு மேற்பட்டோரும் இராணுவத்தில் சேரலாம்!! -ரஷ்ய ஜனாதிபதி அதிரடி-

ரஷ்யா நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ள அனுமதிக்கும் அரசாணைக்கு அந்நாட்டின் ஜனாதிபதி புடின் ஒப்புதல் கொடுத்துள்ளார். 

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரை 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உச்சக்கட்ட வயது வரம்பு அகற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், தகவல் தொடர்பு நிபுணர்கள் என ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்களை ராணுவத்தில் சேர்க்க ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.