தளபதி விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்!!

ஆசிரியர் - Editor II
தளபதி விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடித்து வருகின்றார். 

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த படத்தில் ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் அத்வைத் வினோத் ஆகிய இரு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு