யாழ்.மாவட்டத்திற்கு 1 மில்லியன் கிலோ கிராம் அரிசி மற்றும் 7500 கிலோ கிராம் பால்மா முதற்கட்ட ஒதுக்கீடு..! மாவட்டச் செயலர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு 1 மில்லியன் கிலோ கிராம் அரிசி மற்றும் 7500 கிலோ கிராம் பால்மா முதற்கட்ட ஒதுக்கீடு..! மாவட்டச் செயலர் தகவல்..

தமிழக மக்களின் உதவி திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்திற்கான முதற்கட்ட உதவிப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தொிவித்திருக்கின்றார். அதில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

இந்தியா - தமிழக மக்களின் உதவி திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கான முதற்கட்ட ஒதுக்கீடுகள் எமக்கு கிடைக்கப்பெறவுள்ளது. 

அதன்படி 1 மில்லியன் கிலோ கிராம் அரிசி மற்றும் 7500 கிலோ கிராம் பால்மா கிடைக்கும். அதனை தேவை அடிப்படையில் பகிர்ந்து வழங்குவோம். 

மேலும் பால்மா வறிய குடும்பங்களில் உள்ள கர்ப்பவதி தாய்மார், பாலுட்டும் தாய்மார், சிறிய குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு