கொலை முயற்சியில் உயிர் தப்பிய புதின்!! -உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்-
ரஷிய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உக்ரைன் இராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியதாவது:-
ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷியாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்தது.
பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷியா போர் ஆரம்பித்த பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விட்டார் என்றார்.