யாழ்.நகரில் சமையல் எரிவாயு பெற காத்திருந்த மக்கள்! மாவட்டச் செயலர் அனுமதிக்கவில்லை என பொய் கூறி இழுத்தடிப்பு, மாவட்ட செயலரே தலையிட்டதால் தீர்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் சமையல் எரிவாயு பெற காத்திருந்த மக்கள்! மாவட்டச் செயலர் அனுமதிக்கவில்லை என பொய் கூறி இழுத்தடிப்பு, மாவட்ட செயலரே தலையிட்டதால் தீர்வு..

யாழ்.நகரில் உள்ள சமையல் எரிவாயு விநியோக இடத்தில் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்படாத நிலையில், யாழ்.மாவட்டச் செயலரின் தலையீட்டினால் அங்கு நின்ற மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. 

நகரிலிருந்து கொட்டடி செல்லும் வீதியில் உள்ள குறித்த மொத்த விநியோக இடத்தில் இன்று காலை தொடக்கம் பொதுமக்கள் காத்திருந்த நிலையில் அங்கு விற்பனை செய்யப்படுவதில்லை எனவும், அருகில் உள்ள விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றிருந்தனர். எனினும் விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லாத நிலையில் மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் கூடியதால் யாழ்.மாவட்டச் செயலர் விநியோக பணிகளை நிறுத்துமாறு கூறியதாக கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் யாழ்.மாவட்டச் செயலரின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்ற நிலையில் அவ்வாறான அறிவித்தல் எதனையும் தான் விடுக்கவில்லை. என கூறிய மாவட்டச் செயலர் தாம் இதில் தலையிடுவதாக கூறியிருந்தார். 

பின்னர் மாவட்டச் செயலரின் தலையீட்டை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த பொலிஸார் வெளியில் இருந்து மேலும் பொதுமக்கள் உள்நுழையாதவாறு பாதைகளை பூட்டியபின்னர் காலையிலிருந்து சமையல் எரிவாயுவுக்காக காத்திருந்த மக்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு