சல்லி கடற்பரப்பில் கடற்படை அதிரடி..! குழந்தைகள் உள்ளிட்ட 67 பேர் கைது, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் உள்ளனராம்..
கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 67 பேர் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - சல்லி கடற்பகுதியில் வைத்தே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் ஆண்கள் எனவும் எஞ்சி 22 பேரில் 7 பெண்களும் உள்ளதாகவும்,
ஏனையோர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா
மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.