SuperTopAds

வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு மட்டுப்பாடு..! உடன் அமுலுக்கு வரும்வகையில்..

ஆசிரியர் - Editor I
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு மட்டுப்பாடு..! உடன் அமுலுக்கு வரும்வகையில்..

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்திருக்கின்றது. 

இந்த மட்டுப்பாடு உடன் அமுலுக்கு வரும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருக்கின்றது. 

இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மட்டும் எரிபொருள் வழங்கப்படும்.

மேலும் கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும், பஸ்கள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு  

இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.