SuperTopAds

பிரித்தானியர்கள் இந்த நாட்டை சுறண்டவில்லை, நிலைபேறான பொருளாதாரத்திற்குரிய மூலங்களை கொடுத்தார்கள்...

ஆசிரியர் - Editor I
பிரித்தானியர்கள் இந்த நாட்டை சுறண்டவில்லை, நிலைபேறான பொருளாதாரத்திற்குரிய மூலங்களை கொடுத்தார்கள்...

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு திட்டமிடாத பொருளாதார முறையும் திட்டமிடாத செலவுகளுமே பிரதான காரணமென வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை சுட்டிக்காட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சொண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்த புதிய ஆட்சி மாற்றத்தில் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி நிலையை கண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இந்நிலை ஏற்படுவதற்கு நாங்கள் எங்கோ ஓரிடத்தில் பாரிய தவறு ஏற்படுத்தியுள்ளோம். 

அதை சிறந்த திட்டமிடலின் மூலம் சீர் செய்ய வேண்டும். 1947ஆம் ஆண்டு பிரித்தானியா இலங்கையை தனது ஆதிக்கத்தில் இருந்து விட்டுச் செல்லும்போது ஒரு பவுன்ஸ் 10 ரூபாயாகக் காணப்பட்டது.

1969 ஆம் ஆண்டு எனது சம்பளம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டபோது ஒரு பவுண்ட் 14 ரூபாயாக காணப்பட்ட நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டு ஒரு பவுன் 420 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது.

இலங்கையை ஆண்ட வெளிநாட்டவர்கள் இலங்கையை சுறண்டவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில் பிரித்தானியர் இலங்கையை விட்டு செல்லும் போது இரண்டு பொருளாதார மாற்றங்களை இலங்கையில் விட்டுச் சென்றார்கள்.

தேயிலை இறப்பர் பயிர்ச்செய்கை இன்றும் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிக்கின்ற துறையாக காணப்படுகின்ற நிலையில் பிரித்தானியர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

1942ஆம் ஆண்டு இலங்கையில் முதல் முதலில் எல்லோரும் நெல் அரிசிச் சோறு உண்ட ஆண்டாக பார்க்க முடியும். அதற்கு முன்னர் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சோற்றை உட்கொண்டார்கள்.

அப்போதைய பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கையில் அரிசி இல்லாவிட்டாலும் சந்திரமண்டலத்தில் இருந்து கொண்டு வந்து தருவேன் என கூறி மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெற்றார்.

இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் சரியான வழியில் கட்டியெழுப்பப்பட்டு வந்த நிலையில் எங்கு எப்படி பிழைத்தது என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

வருமானத்துக்கு அதிகமான வாழ்க்கை தரத்தை வாழ முடியாது அது வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி அல்லது தனி மனிதனாக இருந்தாலும் சரி 265 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட சிங்கப்பூரில் 44 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 

ஆனால் 440 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட யாழ் குடாநாட்டில் ஆறு லட்சம் பேரே வாழ்கின்றனர். அப்போதய சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வரும்போது இலங்கையைபோல் சிங்கப்பூரை மாற்ற வேண்டுமென கூறியிருந்தார்.

ஆனால் சிங்கப்பூர் வீறுகண்டு எழுந்து விட்டது இலங்கை பின் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இலங்கையில் வறுமையைப் போக்க சமுர்த்தி நிவாரணத்தை கொண்டுவந்தார்கள் வறுமை போய்விட்டதா? ச

முர்த்தி பெறுபவர்கள் வருமான உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே நாட்டுக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு வருமானங்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி 

அதனை உரிய முறையில் செலவு செய்யும் போதே நாடு சிறந்த பொருளாதாரத்தை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.