யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள பல்பொருள் அங்காடி தீ விபத்தில் முற்காக நாசம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள பல்பொருள் அங்காடி தீ விபத்தில் முற்காக நாசம்..!

யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்திருக்கின்றது. 

இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது. 

சம்பவத்தில் கடையில் தங்கியிருந்த ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழ்.மாநகர சபை தீயணைப்பு படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு