யாழ்.சண்டிலிப்பாயில் ரவுடி கனி மீது வாள்வெட்டு நடத்திய 5 ரவுடிகள் கைது! வாள்கள், திருட்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் ரவுடி கனி மீது வாள்வெட்டு நடத்திய 5 ரவுடிகள் கைது! வாள்கள், திருட்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு..

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கனி என்றழைக்கப்படும் ரவுடி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த 5 ரவுடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த 17ம் திகதி சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் கனி என்றழைக்கப்படும் ரவுடி மீது மற்றொரு ரவுடி கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 5 ரவுடிகளை கைது செய்துள்ளதுடன், 

அவர்கள் பயன்படுத்திய இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர், கட்டைக்காடு பகுதியை சேர்ந்த இருவர், தெல்லிப்பழையை சேர்ந்த இவருவர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ரவுடிகளால் பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்களை மீட்டுள்ளனர். 

மேலும் ரவுடிகளால் பயன்படுத்தப்பட்ட குறித்த இரு மோட்டார் சைக்கிள்களும் யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் திருடப்பட்டவை எனவும் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு