பெற்றோல் தட்டுப்பாடு இன்று முடிவுக்கு வருமாம்..! நேற்று காலை தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் ஆரம்பம் - அமைச்சர் காஞ்சன
மற்றொரு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய சரக்கு கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அதனை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி தகவலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர கூறியுள்ளார். மேலும் கடந்த 2 நாட்களில் நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டது.
அந்த விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். அத்தோடு. பெட்ரோல் 92, 95 ஒக்டைன் ஆகியவற்றின் விநியோகம் நேற்று காலை முதல் தொடங்கியுள்ளது,
எனவும் அமைச்சர் தனது ருவிட்டர் பக்கததில் குறிப்பிட்டுள்ளார்.