SuperTopAds

கனடாவிற்குள் நுழைய ரஷிய ஜனாதிபதிக்கு முழுத் தடை!!

ஆசிரியர் - Editor II
கனடாவிற்குள் நுழைய ரஷிய ஜனாதிபதிக்கு முழுத் தடை!!

ரஷிய ஜனாதிபதி புதின் மற்றும் அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

ரஷிய நாட்டின் ஜனாதிபதி விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பின்னர் ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின், அவரது அரசு மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், 'புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷியாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்' என்று மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.