மிலேச்சைதனமான குமுதினி படுகொலையின் 37ம் ஆண்டு நினைவேந்தல் இன்று நெடுந்தீவில்..

ஆசிரியர் - Editor I
மிலேச்சைதனமான குமுதினி படுகொலையின் 37ம் ஆண்டு நினைவேந்தல் இன்று நெடுந்தீவில்..

இலங்கை கடற்படையினால் குமுதினி படகில் நடத்தப்பட்ட மிலேச்சைதனமான படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் இன்று நெடுந்தீவில் உள்ள நினைவுதுாபில் இடம்பெற்றது. 

குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

1985 ஆம் ஆண்டு காலை 7 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது முப்பத்தி ஆறு பேரை 

குத்தியும் வெட்டியும் கொலை செய்து கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள் பொதுமக்கள் பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு