மாமரத்தில் கொப்பு வெட்டியவர் கொப்பு முறிந்து கீழே விழுந்து உயிரிழப்பு..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மாமரத்தில் கொப்பு வெட்டியவர் கொப்பு முறிந்து கீழே விழுந்து உயிரிழப்பு..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்..

யாழ்.மானிப்பாய் - சங்குவேலி பகுதியில் மாமரத்தில் கொப்பு வெட்டுவதற்கு ஏறியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று பகர் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நா.நகுலேந்திரன் (வயது48) என்ற 6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். 

உயரமான மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டிக் கொண்டிருக்கும்போது அவர் நின்றுகொண்டிருந்த கொப்பு முறிந்து கீழே விழுந்துள்ளது. 

கீழே விழுந்து சுயநினைவற்று கிடந்த குடும்பஸ்த்தரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழப்பு. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio