யாழ்.உரும்பிராயில் கமநல சேவை திணைக்களத்திற்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராயில் கமநல சேவை திணைக்களத்திற்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை..!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பை ஒன்றினை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

உரும்பிராய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் உழவுத் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட கலப்பை கழற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில், 

கமநல சேவை திணைக்களத்திற்குள் நுழைந்த திருடர்கள் கலப்பையை திருடிச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு